மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

காகிதமில்லா இ-பட்ஜெட் : சட்டப்பேரவை தலைவர்!

காகிதமில்லா இ-பட்ஜெட்  : சட்டப்பேரவை தலைவர்!

பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்ய ஆலோசனை செய்து வருவதாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

திமுக பத்தாண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கு வந்ததும், முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதன்முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 5) சட்டப்பேரவை விதிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன், முனிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, "வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்த ஆலோசனை நடைபெற்றது. அது தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

நவீன காலத்தில் அறிவியல் வளர்ச்சியை நோக்கி செல்லும்போது அனைவருமே இதற்கு ஆதரவுதான் தருவார்கள். 1996ல் கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான் டைடல் பார்க் ஏற்படுத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட முன்னெடுப்பினால்தான் இன்று லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். அந்த சமயத்தில் இணையம் வழியாக நடைபெற்ற மாநாடு ஒன்றில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மறைந்த அனந்தகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால்தான் கணினியில் தமிழ் பயன்பாடு கொண்டுவரப்பட்டது. அதுபோன்றுதான் இன்றைய முதல்வரும், வரலாற்று சிறப்புமிக்க காகிதமில்லா பட்ஜெட் முறையை முன்னெடுத்துள்ளார். இதில் நிச்சயமாக நல்ல முடிவு வரும். அந்த வகையில் திமுக அரசுதான் தொழில்நுட்ப வசதிகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் முன் தொடுதிரை வைப்பது, உறுப்பினர்களுக்கு டேப்லேட், கையடக்க கணினி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப அனைவருக்கும் பயிற்சி அளிக்கலாம் என்று முதல்வர் ஆலோசனை வழங்கினார். அனைத்து உறுப்பினர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

முதற்கட்டமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடைசி உறுப்பினர் கற்று கொள்ளும் வரையிலும் இரண்டு நடைமுறைகளும் தொடரும்.

சட்டமன்றத்தில் நடந்த ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்து பொதுவெளியில் கருத்து கூற முடியாது” என்று கூறினார்.

ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 5 ஜூலை 2021