மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

நீட் குழு : ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

நீட் குழு : ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு!

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தொடரப்பட்ட வழக்குகளில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? அப்படி இருந்தால் அதற்கான மாற்று வழி என்ன? உள்ளிட்டவை குறித்து ஆராய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியும், அதன் தோழமை கட்சியான பாஜகவும் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த வாரம் பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நீட் பாதிப்புகளை ஆராய குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டைத் தமிழ்நாடு அரசு எடுக்க முடியாது என அறிவுறுத்தி, இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு, ஒன்றிய அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5ஆம் தேதிக்கு (இன்று) தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “மாணவர்கள் பிரச்சனைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி குழுவின் ஆய்வு அறிக்கைகளை அரசிடமே அளிக்க உள்ளதால் இதில் யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படப் போவதில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ளக் கோரி, திமுக , மதிமுக, சிபிஎம், விசிக மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்று(ஜூலை 5) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி நந்தினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், ”பாஜகவின் வழக்கு விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கத்திற்காக தொடரப்பட்டுள்ளது. அதில் பொதுநலன் இல்லை” என வாதிட்டார்.

இந்த வழக்கில் வாதாட தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று ஒன்றிய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு ஜூலை 8 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் முக்கியத்துவம் கருதியும், மாணவர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் தனித்தனியாக வாதங்களை பெற வேண்டியுள்ளதாலும் வழக்கு விசாரணையை ஜூலை 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

திங்கள் 5 ஜூலை 2021