மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

சிவசங்கர் பாபாவின் 5 பக்தைகளுக்கு முன் ஜாமீன்!

சிவசங்கர் பாபாவின் 5 பக்தைகளுக்கு முன் ஜாமீன்!

சிவசங்கர் பாபாவின் ஐந்து பெண் சீடர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாபாவுக்கு உடந்தையாக இருந்த அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், பெண் சீடர்கள் கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகிய ஐந்து பேரும் முன் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் இன்று(ஜூலை 5) நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்றுக் கூறி ஐந்து பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, இரண்டு வாரங்களுக்கு ஐந்துபேரும் காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும். தங்களுடைய பாஸ்போர்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

திங்கள் 5 ஜூலை 2021