மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

இந்தியா நம்பர் ஒன்-எதில்? பிரேமலதா பேச்சு!

இந்தியா நம்பர் ஒன்-எதில்? பிரேமலதா பேச்சு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் பயணித்த படம் நேற்று சமூக தளங்களை ஆக்கிரமித்த நிலையில்... பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் பயணிக்கும் படம் இன்றைய (ஜூலை 5) சோஷியல் மீடியாக்களில் பரவி வருகிறது.

இந்தியா முழுதும் பெட்ரோல் விலை நூறு ரூபாயைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. டீசல் விலை நூறு ரூபாயைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இப்போது 850 ரூபாய் ஆகியிருக்கிறது.

இந்த விலை உயர்வுகளைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட பெறாத தேமுதிக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இன்று ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறது. தமிழகம் முழுதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள சைக்கிளில் வந்தார். அதுவே தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பின் ‌ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். ஆர்பாட்டத்தில் அவர் பேசும்போது, “உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவது இந்தியாவில்தான். இதை குறைக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன. தேர்தலில் வாக்குறுதி கொடுத்தவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 5 ஜூலை 2021