மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

திமுகவை நோக்கி தோப்பு வெங்கடாசலம்

திமுகவை நோக்கி தோப்பு வெங்கடாசலம்

சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல்வேறு கட்சிகளில் இருந்து ஆளுங்கட்சியான திமுகவுக்கு பலரும் செல்லும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து அதன் துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி ஆகியோர் திமுகவில் சேர்ந்தனர்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் முயற்சியில் கரூர் மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பிற மாவட்டங்களில் இருந்தும் அதிமுகவினர் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் அமைச்சரும் தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வருமான தோப்பு வெங்கடாசலம் திமுகவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என்று கொங்கு அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் உலவுகின்றன.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இரு முறை வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாசலத்துக்கு கடந்த தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் கோபமான அவர் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்த காரணத்திற்காக அவர் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். தேர்தலுக்கு முன்பே அவரை திமுக சார்பில் அணுகியபோது, ‘அடுத்து எங்க ஆட்சிதான். அதனால நான் மறுபடியும் கட்சியில சேர்ந்துப்பேன்’ என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக போட்டியிட்ட போதும் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் வெற்றி பெற்றார். மேலும் தோப்பு வெங்கடாசலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை பெற்றார். ஆனால் அதிமுக ஆட்சியை இழந்தது.

இந்த நிலையில் தற்போது செந்தில்பாலாஜி வழியாக திமுகவில் இணைய இருக்கும் பிற கட்சியினரின் பட்டியலில் தோப்பு வெங்கடாச்சலத்தின் பெயரும் அடிபடுகிறது. செந்தில்பாலாஜி மூலமாக திமுகவில் சேர தோப்பு முயற்சி மேற்கொண்டிருப்பதாகவும் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சுயேச்சையாக நின்று சுமார் பத்தாயிரம் வாக்குகள் பெற்ற தோப்பு வெங்கடாசலத்தை அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் கொங்குமண்டலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமும் செந்தில்பாலாஜியிடம் இருக்கிறது என்கிறார்கள் கரூர் ஈரோடு திமுகவினர்.

வணங்காமுடிவேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

திங்கள் 5 ஜூலை 2021