மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 ஜூலை 2021

ரஃபேல்: பிரான்ஸ் விசாரணை - மோடி அரசு மௌனம் ஏன்?- காங்கிரஸ்

ரஃபேல்: பிரான்ஸ் விசாரணை - மோடி அரசு மௌனம் ஏன்?- காங்கிரஸ்

இந்திய ராணுவத்துக்கு வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக அரசோ அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்படும் பிரான்ஸ் நாட்டில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்ததத்தை ரத்து செய்துவிட்டு, 2016 ஆம் ஆண்டு மோடி ஆட்சியில் புதிய ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்திய இடைத்தரகா் ஒருவருக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.8.8 கோடி லஞ்சமாக வழங்கியதாக பிரான்ஸை சோ்ந்த புலனாய்வு வலைதளமான ‘மீடியாபார்ட்’ கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில் ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு நீதிபதியை நியமித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. டெல்லியில் நேற்று (ஜூலை 4) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா,

“ இரு நாடுகளின் பாதுகாப்புத் துறையினர் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது எப்படி? விமானங்களை விற்றிருக்கும் பிரான்ஸ் நாடு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில், விமானங்களை வாங்கிய இந்தியா ஏன் விசாரணைக்கு தயங்குகிறது? இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு 24 மணி நேரம் ஆகியும் இந்திய அரசு இதுகுறித்து ஏன் மௌனமாக இருக்க வேண்டும்? இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய பாதுகாப்புத் துறை அமைச்சகமும் அமைதிகாத்து வருகிறது. எனவே ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியாகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 5 ஜூலை 2021