மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

ஒன்றிய அரசல்ல... இந்தியப் பேரரசு: ஓபிஎஸ்

ஒன்றிய அரசல்ல... இந்தியப் பேரரசு: ஓபிஎஸ்

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தற்போதைய திமுக அரசு அழைத்து வருவது பற்றி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதுபற்றி சட்டமன்றத்திலேயே பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘சட்டத்தில் இல்லாததை நாங்கள் கூறவில்லை’ என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இந்த சர்ச்சையில் சற்றே பொறுமையாக நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம். இதுகுறித்து இன்று (ஜூலை 4) ஓபிஎஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

“திமுக அரசு அமைந்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை முதல்வர் சட்டமன்றத்திலே கூறியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. அதில், ‘இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களைக்கொண்ட ஒன்றியமாக இருக்கும்’ என்று இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஆனால், அது பொருளல்ல. அம்பேத்கரால் வடிவமைக்கப்பட்ட அரசமைப்பு சட்டம் 5ன் படி, யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல்லே தவிர, இந்திய அரசைக் குறிக்கும் சொல் அல்ல. எனவே யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதன் பொருள் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதுதான்,

எந்தத் தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால், ‘மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது’ என்றுதான் அண்ணாவே 1963 ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். அதாவது மாநிலங்களைப் பிரித்துக்கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல அரசினர் தீர்மானங்களில், ‘இந்திய பேரரசு’ என்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டிருப்பதை இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போலும் சிறுமைப்படுத்துவது போலும் அமைந்துள்ளதாக தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அரசுடன் இணக்கப் போக்கினை கடைபிடித்து தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்சினைகளை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்காமல்... ஒன்றிய அரசு என்று சொல்லிக் கொண்டிருப்பது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல”என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ்.

மேலும் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறாததை சுட்டிக்காட்டி, கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று கூறுவது நியாயமா, இது இந்திய இறையாண்மைக்கு உகந்ததா என்றும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

-வேந்தன்

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 4 ஜூலை 2021