மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

குரூப் 2 தேர்வர்களுக்கு குட் நியூஸ்!

குரூப் 2 தேர்வர்களுக்கு குட் நியூஸ்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தமிழக அரசு இணைய வழி இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழக அரசுப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளனர். வீட்டிலேயே தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். அப்படித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, தமிழக அரசே இணையம் மூலம் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்விற்கு ஜூலை 5 ஆம் தேதி முதல் கட்டணமில்லா இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. அதற்காக க்யூஆர் கோடும் வெளியிடப்பட்டுள்ளது.

cisco webex இணையவழி மூலமாகவும் அல்லது cisco app மூலமாகவும் இணையவழி பயிற்சியில் நேரடியாக இணையலாம் என்றும், காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 2 மணி முதல் 4 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் அரசு அலுவலர்களை கொண்டு மாதிரி நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பயிற்சியில் பங்கு பெறுவது தொடர்பான தகவலுக்கு வாட்சப் குரூப் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான க்யூஆர் கோடும், மேலே இடம்பெற்றுள்ள அறிக்கையில் உள்ளது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 4 ஜூலை 2021