மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சசிகலா

பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சசிகலா

அமமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சென்று வரும் நிலையில் அமமுக தரப்பில் மௌனம் நிலவுகிறது.

அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் நேற்று (ஜூலை 3) மாலை திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அவரோடு இன்னும் பல நிர்வாகிகள் திமுகவுக்கு செல்லத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள்.

மேலும் சில தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துவிட்டு, அதன் பிறகு சசிகலாவிடமும் போனில் பேசியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் அறிந்த சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்திருக்கிறார். ‘அமமுக பிரமுகர்கள் அன்செக்யூராக ஃபீல் பண்ணுகிறார்கள். அதைப் பயன்படுத்தி செந்தில்பாலாஜி அவர்களை இழுத்துச் செல்கிறார்’என்று கூறியிருக்கிறார்கள் அமமுக மேல் மட்டப் புள்ளிகள்.

தொடர்ந்து அமமுக பிரமுகர்கள் பிற கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில் அமமுகவின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் இது தொடர்பாக கட்சியின் கருத்தறிய பேசினோம். நாம் பேசிய நான்கு மாநில நிர்வாகிகளுமே சொல்லி வைத்தாற்போல ஒரே கருத்தையே பேசினார்கள்.

“சசிகலா நிர்வாகிகள், தொண்டர்களிடம் தினந்தோறும் உரையாடி வருகிறார். அவரிடம் உரையாடிய சிலர் பிற கட்சிகளுக்கு செல்வது பற்றியும் அவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அது தெரிந்துதான் அவர்களோடு உரையாடி வருகிறார். மேலும் டிடிவி தினகரனுடனும் சசிகலா பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

ஊரடங்கு தளர்வுகள் மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் இன்னும் ஒரு வாரத்தில் சசிகலா பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது அவர் அதிமுக, அமமுக பற்றி விரிவாக பதிலளிப்பார். அதனால் இப்போது யாரும் பத்திரிகையாளர்களிடம் பேட்டிக்கு கமிட் ஆக வேண்டாம் என்று வாய்மொழியாக சொல்லப்பட்டிருக்கிறது. சசிகலாவின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின் இதுகுறித்து பல தெளிவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுவரைக்கும் நாங்களும் காத்திருக்கிறோம். நீங்களும் காத்திருங்களேன்” என்று சொல்கிறார்கள் அமமுகவின் மாநில நிர்வாகிகள் சிலர்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 4 ஜூலை 2021