மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 4 ஜூலை 2021

ராஜேந்திர பாலாஜி வீட்டுக்குச் சென்ற 1.5டன் ஸ்வீட்ஸ்: அமைச்சர் நாசர்

ராஜேந்திர பாலாஜி வீட்டுக்குச் சென்ற 1.5டன் ஸ்வீட்ஸ்: அமைச்சர் நாசர்

கடந்த ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டிருக்கிறது. இதுபோன்று பல ஊழல்கள் நடந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால் வளத் துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பால் விலை ரூ.3 குறைத்ததன் மூலம், 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது அவரிடம், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக இருந்த போது பணி நியமன மற்றும் பால் பவுடர் ஆகியவற்றில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நாசர், கடந்த ஆட்சியின் போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக 234 பேர், இடைத்தரகர் மூலம் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதவிர, 636 முதுநிலை மற்றும் இளநிலை ஆலை பணியாளர்களை நியமிக்க விதிமுறைகள் இல்லாமல் முறைகேடாகப் பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தப் பணியிடங்களுக்குப் புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பால் விற்பனை நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 நிலையங்கள் உள்பட விலை குறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 ஆவின் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற தவறுகளைக் கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம்.

நிறைய ஊழல்கள் நடந்துள்ளது. சொல்லப்போனால், ஆவின் நிர்வாகத்திலிருந்து தீபாவளி சமயத்தில் இலவசமாக ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஸ்வீட்ஸ் சென்றுள்ளது. இதற்கு ஆதாரம் உள்ளது. ஆவின் ஊழல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் இறுதி முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 4 ஜூலை 2021