மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

செந்தில்பாலாஜி கேம்: திமுகவில் அமமுக பழனியப்பன்

செந்தில்பாலாஜி கேம்: திமுகவில்  அமமுக பழனியப்பன்

அமமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று (ஜூலை 3) மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்துவிட்டார்.

அமமுகவில் அடுத்த விக்கெட் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் ஜூன் 29 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், அமமுகவின் மண்டலப் பொறுப்பாளரும் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பனிடமும் செந்தில்பாலாஜி பேசிவிட்டார், விரைவில் அவரும் திமுகவில் ஐக்கியமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இதன்படியே இன்று (ஜூலை 3) மாலை அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பன் திமுகவில் சேர்ந்துவிட்டார். அவருடன் அமமுக புள்ளிகளும் திமுகவில் சேர்ந்துள்ளனர்.

தன்னோடு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் இப்போது அமமுகவில் இருக்கும் அனைத்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களையும் திமுக பக்கம் கொண்டுவருவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே இவர் சோளிங்கர் பார்த்திபன், ஆம்பூர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட அமமுகவில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசியிருந்தார்.

அந்த வகையில் சீனியரான பழனியப்பனை தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் அவர் பண்ணை வீட்டுக்கே சில நாட்களுக்கு முன் சென்று சந்தித்திருக்கிறார் செந்தில்பாலாஜி. அப்போது பழனியப்பனிடம், ‘அண்ணே டிடிவிக்காக நான் கடுமையாக செலவு பண்ணேன். இப்ப நீங்க பண்ணிக்கிட்டிருக்கீங்க. இனிமே அங்க இருந்தா உங்க அரசியல் அனுபவம் வீணா போயிடும். நான் சிஎம்கிட்ட பேசிட்டுதான் உங்கள பாக்க வந்திருக்கேன். நீங்க திமுகவுக்கு வந்துடுங்க. உங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை திமுகவுல கொடுப்பாங்க’ என்று பேசியிருக்கிறார். அதன் பின் தொடர்ந்த பேச்ச்சுவார்த்தை அடிப்படையில் இன்று திமுகவில் சேர்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இன்று காலை பாப்பிரெட்டி பட்டியில் இருந்து கிளம்பும்போது தனது ஆதரவாளர்களுடன் ஒரு கூட்டம்போட்டு தனது முடிவு பற்றி விளக்கிய பழனியப்பன், அதன் பின் கோபூஜை நடத்தியிருக்கிறார். முக்கியமான விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் கோபூஜை நடத்துவது அவர் பழக்கம். இந்த வகையில் கோபூஜை நடத்திவிட்டு சென்னைக்குப் புறப்பட்டிருக்கிறார். சென்னை வந்தவரை செந்தில்பாலாஜி சந்தித்து அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

செந்தில்பாலாஜியின் ‘பவர்’ இன்னும் எத்தனை அமமுகவினரை திமுகவுக்கு கொண்டுபோகுமோ என்ற எதிர்பார்ப்பு அமமுக வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

-வணங்காமுடி வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 3 ஜூலை 2021