மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்!

தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும்: முதல்வர் அறிவுறுத்தல்!

நியாய விலைக் கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கவும், புதிய குடும்ப அட்டைகளை தாமதமின்றி உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்கள் நலனுக்காக கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 3) தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பொருட்களின் தரத்தினை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு தாமதமின்றி குடும்ப அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடனுதவி கேட்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்,மகளிர் தொழில்முனைவோர், சிறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தகுதியானவர்களுக்குக் கடன் வழங்கிட வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.

பொது விநியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், நியாய விலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருதல், வாடகை கட்டடங்களில் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு சொந்தக் கட்டடங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்துதல், பொருட்கள் போக்குவரத்தை இணையம் மூலம் கண்காணித்தல், எடைக்குறைவை களைதல், தரமான சேவையை வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கினார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 3 ஜூலை 2021