மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கை: அமைச்சர் கொடுத்த வாக்குறுதி!

ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கை: அமைச்சர் கொடுத்த வாக்குறுதி!

ஒப்பந்ததாரர்களின் 22 கோரிக்கைகளையும் நிறைவேற்ற சிறப்புக் குழு விரைவில் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களின் கோரிக்கை குறித்து துறை செயலாளர், அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூலை 3) நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்களுடன் கடந்த 30 ஆம் தேதி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில், சில சீர்திருத்தங்கள் இல்லாமல் இந்தத் துறை செயல்பட்டு வருகிறது, அரசின் மதிப்பீட்டில் வேலைகளை செய்ய முடியவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர். இந்த கோரிக்கைகளுக்கு துறை சார்ந்த தலைமை பொறியாளர்களை வைத்து சிறப்புக் குழு அமைத்து இதற்கு முடிவெடுக்கப்படும் என்று அன்றைக்கு அவர்களிடத்தில் கூறினேன்.

அதன்படி, சிறப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், ஒப்பந்ததாரர்கள் 22 கோரிக்கைகளை அரசிற்கு வைத்தனர். ஒவ்வொரு கோரிக்கைகளும் சிறப்பு குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டது.

அதில், ஆற்று மணல் கிடைக்காததால் அதற்கு மாற்றாக எம்.சாண்ட் மணலை பயன்படுத்த அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மணலை விட எம்.சாண்டு தான் உறுதித்தன்மை அதிகம் என்பதால் பயன்படுத்தலாம் என்று சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளர் பரிந்துரை செய்தார்.

சென்னையில் நெடுஞ்சாலைத் துறை பணிகள் இரவு நேரத்தில் மட்டுமே நடைப்பெறுகிறது. அதனால், இரவு நேர பணிகளுக்கான நேர நீட்டிப்பு வழங்க வேண்டும். டீசல் விலை அதிகரிப்பால் வண்டி வாடகையை ஏற்ற வேண்டும். சாலையை விரிவாக்கம் செய்கிற போது மின் கம்பங்களை அகற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது, என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

நிதி நிலை சார்பாகவும் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த கோரிக்கைகளை சிறப்புக் குழு ஆய்வு செய்துள்ளோம். இந்த பரிந்துரைகளை முதல்வருக்கு அறிக்கையாக சமர்ப்பித்து, அவரின் அனுமதியுடன் எந்தெந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை வெளிப்படையாக அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தமிழகத்தில் தரமான சாலைகளை அமைப்பது தான் தொலைநோக்கு திட்டத்தின் இலக்கு. மாநகராட்சி பகுதிகளில் சாலைகளை அமைக்கும்போது பழைய சாலைகளை அகற்றிவிட்டுதான் புதிய சாலைகள் அமைக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த பிறகுதான் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட வேண்டும் என்ற அரசு ஆணையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று குழுக் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பொதுப்பணித்துறை சார்பில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்” என்று பேசி முடித்தார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 3 ஜூலை 2021