மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் ஆன்லைன் கேம்: டிஜிபி அட்வைஸ்! 

வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் ஆன்லைன் கேம்: டிஜிபி அட்வைஸ்! 

வாழ்க்கையைகேள்விக்குறியாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்க்கவேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

கொரோனா காரணமாகபள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதனால், ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், அதிகளவில் செல்போனை பயன்படுத்தும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி விடுகின்றனர். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளால்மாணவர்களுக்கு கோபம், தற்கொலை எண்ணமும் அதிகரிக்கிறது. இதுபோன்ற ஆன்லைன்விளையாட்டுகளை ஒன்றிய, மாநில அரசுகள்தான் தடுக்க முடியும் என்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற டிஜிபி சைலேந்திரபாபு இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ”இது 15 வயதிலிருந்து 25 வயது வரையுள்ள இளைஞர்களுக்கானபதிவு. இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி,தங்களுடைய பொன்னான நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார்கள். 24 மணி நேரம் கூட விளையாட்டிலேயே மூழ்கி கிடக்கிற இளைஞர்களும் உண்டு.

இதனால் உங்களால் பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. உலக விஷயங்களைதெரிந்துக் கொள்ள முடியாது. உறவுகள் யார் என்பதும், அதுகுறித்த புரிதலும் இருக்காது. உடலளவிலும், மனதளவிலும், சமூக அளவிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி ஆன்லைன் விளையாட்டுகளில் நேரத்தை செலவிடுவதால், பிற்காலத்தில் உங்களுக்கு நியாயமான வேலை கிடைக்காது. உங்களுடன் சேர்ந்து படித்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய தொழில் அதிபர்களாகவும், உயர்பதவிகளிலும் இருக்கும்போது, நீங்கள் வருமானம் இல்லாமல் சிரமப்பட வேண்டி இருக்கும்.

ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்டவை உங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும். ஆன்லைன் விளையாட்டுகளை நிறுத்திவிட்டுபடிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேறும் வழிகளில் ஈடுபட வேண்டும்”என்று பேசியுள்ளார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

சனி 3 ஜூலை 2021