மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஜூலை 2021

ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் காலக்கெடு ஏன் விதிக்கக்கூடாது?: நீதிமன்றம்!

ஆறுமுகசாமி ஆணையத்துக்குக் காலக்கெடு ஏன் விதிக்கக்கூடாது?: நீதிமன்றம்!

மூன்று மாதத்தில் விசாரணையை முடிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் 25ஆம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது. 2017 நவம்பர் 22ஆம் தேதி,ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையைத் தொடங்கி அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகத்தினர் உள்பட இதுவரை 150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

ஆனால் 3 ஆண்டுகள் கடந்தும் இன்னும் விசாரணை முடியவில்லை. இதுவரை 10 முறைக்கும் மேல் இந்த ஆணையத்துக்குக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணியன் என்பவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. விசாரணையும் முடியவில்லை. எனவே, விசாரணையை விரைவாக முடித்து, ஆணையத்தைக் கலைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (ஜூலை 2) விசாரணைக்கு வந்தது, அப்போது, ‘இந்த ஆணையம் விசாரணையை 3 மாதங்களில் முடித்து, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 3 ஜூலை 2021