மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

ஆவின் பணி நியமன முறைகேடு: ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை!

ஆவின் பணி நியமன முறைகேடு: ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை!

அதிமுக ஆட்சியில் ஆவினில் நடைபெற்ற முறைகேடான பணி நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்தார். அப்போது ஆவின் சங்கங்களில் முறைகேடாகப் பணி நியமனம் நடைபெற்றுள்ளதாக ஆவின் நிர்வாகத்துக்குப் புகார்கள் சென்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆவின் பால் உற்பத்தியாளர் சங்கங்களில் 470 பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இந்தப் பணியிடங்கள் நிரப்பும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஆவின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து முறையாகத் தேர்வு நடைபெறாமல் கடந்த மே 24ஆம் தேதி பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஆவினில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் ஆவின் ஒன்றியங்களில் முறைகேடாக 236 பணி நியமனங்கள் நடைபெற்றது கண்டறியப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்காக 4.5 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார்கள் வந்துள்ளன.

இதுதவிர 176 முதுநிலை உதவியாளர்கள் பணியிடங்கள், 138 தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பணி நியமனங்கள் தொடர்பான புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது.

விசாரணை நடத்துவதற்கான ஆவணங்களைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்து அதன் அறிக்கை ஒரு வாரத்துக்குள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வெள்ளி 2 ஜூலை 2021