மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

ஊரடங்கில் அடுத்த தளர்வுகள்: முதல்வர் ஆலோசனை!

ஊரடங்கில்  அடுத்த தளர்வுகள்: முதல்வர் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகளை அளிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 2) ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மூன்று வகையாக மாவட்டங்களைப் பிரித்து பல்வேறு வகையான தளர்வுகள் அறிவித்து ஜூலை 5ஆம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை நீட்டித்தது.

முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள், இரண்டாம் வகையில் அரியலூர், கடலூர், தருமபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்கள், மூன்றாம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் வருகின்றன.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த சில தினங்களாக, தஞ்சாவூர், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்குக் கூடுதல் கவனம் செலுத்துவது,

முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிப்பது, அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் செயல்படும் நேரத்தை அதிகரிப்பது, வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 2 ஜூலை 2021