மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

நீட் குழு: பாஜக வழக்கைத் தள்ளுபடி செய்ய மனு!

நீட் குழு: பாஜக வழக்கைத் தள்ளுபடி செய்ய மனு!

முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு எதிராக பாஜக சார்பில் போடப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்பு மற்றும் மாற்று வழி குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவைத் தமிழக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு கடந்த ஜூன் 29ஆம் தேதி தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு செயல்படுவதாகவும் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.

இதைவிசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும் நீட் பாதிப்பு குறித்து ஆராயக் குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து இந்த வழக்கை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் முன்னாள் நீதிபதி குழுவை எதிர்த்து பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி நந்தினி என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மாணவர்கள் பிரச்சினையில் அரசியல் வாதிகளுக்கு இடமில்லை. ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி, ஆய்வு அறிக்கைகளை அரசிடமே அளிக்க உள்ளதால், இதில் யாருடைய உரிமைகளும் பாதிக்கப்படப் போவதில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி முறையிட்டார். இதனை ஏற்று நீதிபதிகள், ஜூலை 5ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 2 ஜூலை 2021