மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

முறையற்ற பத்திரப்பதிவு - உடனடி நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

முறையற்ற பத்திரப்பதிவு - உடனடி நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

முறையற்ற வகையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் வேலூர், கடலூர் மண்டல பணி சீராய்வு கூட்டம் நேற்று (ஜூலை 1) நடைபெற்றது. இதில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “முறையற்ற வகையில் பத்திரப்பதிவு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுபோன்ற தவறுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் மாநில அளவிலும், மண்டல அளவிலும் இருக்கக்கூடிய பதிவுத்துறை துணைத் தலைவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர் போன்றோரை மாற்றி, நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்து இருக்கிறோம்.

குற்றங்கள் உறுதி செய்யப்படும் பதிவாளர்களை உடனடியாக மாற்றம் செய்தும், சிலரை பணியிடை நீக்கமும் செய்துள்ளோம்.

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராகச் சேருவதற்கு கிராமப்புற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.500 பதிவுக் கட்டணம் செலுத்தாமலே சிறு வணிகர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த காலங்கள் போன்று இல்லாமல் தற்போது, பத்திரப்பதிவு முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. பத்திர அலுவலகங்களில் பதிவு செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் பதிவு செய்து அன்றைய தினமே ஆவணங்களைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிகர்களின் கோரிக்கைகள் முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். போலி பில்களை ஒழிக்க வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று பேசினார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வெள்ளி 2 ஜூலை 2021