மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஜூலை 2021

ஒவ்வொரு தொண்டரையும் சந்திப்பேன்: சசிகலா

ஒவ்வொரு தொண்டரையும் சந்திப்பேன்: சசிகலா

ஆயிரம் பேரோடு சசிகலா பேசினாலும் அதனால் அதிமுகவுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினாலும், தினந்தோறும் வெளியாகும் சசிகலாவின் தொண்டர்களுடனான உரையாடல் ஆடியோக்கள் அதிமுகவில் தொடர் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

தினந்தோறும் ஒன்று இரண்டு என்று வெளிவந்த ஆடியோக்கள் இப்போது கொத்துக் கொத்தாக வெளிவருகின்றன.

அந்த வகையில் நாமக்கல் ரகுமான், திருப்பூரைச் சேர்ந்த ரெய்ஹானா பானு, போடியைச் சேர்ந்த அம்மா வினித், நெல்லையைச் சேர்ந்த மணிகண்டன், நாமக்கல்லைச் சேர்ந்த ரகுமான், தூத்துக்குடியைச் சேர்ந்த ஹென்றி தாமஸ், ராமதாஸ் உள்ளிட்ட பலருடன் சசிகலா பேசிய ஆடியோக்கள் நேற்று (ஜூலை 1) வெளிவந்தன.

தொண்டர்கள்தான் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆர் வகுத்த விதி என்றும் அதன்படியே தான் நடப்பேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நகர முன்னாள் செயலாளர் ரகுமானிடம் பேசிய சசிகலா, “தலைவர் இந்தக் கட்சியை உருவாக்கும்போதே தொண்டர்கள்தான் கட்சின்னு சொல்லிட்டாரு. அம்மாவும் அதைத்தான் நிலைநிறுத்திக் கொண்டுபோனாங்க. இப்ப நானும் சொல்றேன், தொண்டர்கள்தான் கட்சி. தலைவர், அம்மா வழிதான் என் வழியும். தொண்டர்களுக்காக நான் இருப்பேன், நான் வருவேன். கட்சியை நல்லா கொண்டுபோவோம். எந்தவித வித்தியாசமும் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் அம்மா இருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே நான் கொண்டு போவேன்” என்று கூறுகிறார்.

அப்போது ரகுமான், “அம்மா பொதுச் செயலாளர் நீங்கதான். நாலஞ்சு மாவட்டத்தைச் சேர்ந்தவங்க, ஒரு சமுதாயத்தை தாங்கிக்கிட்டிருக்குறவங்க உருவாக்குற பதவி இல்லைம்மா இது. உங்களை ஆதரிக்கிறவங்களை எல்லாம் நசுக்குறாங்க. ஒவ்வொரு தொண்டரும் உங்களைதான் எதிர்பார்க்கிறோம்” என்று ரகுமான் சொல்ல,

“அதிமுகவில் அனைவரும் தொண்டர்கள்தான். ஒவ்வொரு தொண்டரையும் நான் பார்க்கிறேன், ஒவ்வொரு ஒன்றியம், நகரமுமாய் வருகிறேன். கவலைப்படாதீர்கள். எல்லாவற்றையும் மாற்றி அம்மா இருந்தபோது இருந்த நிலையை நான் கொண்டு வருகிறேன். அம்மா ஒரு தாயா இருந்து எல்லாரையும் பார்த்துக்கிட்டாங்க. அதேபோல நானும் வர்றேன். ஒவ்வொரு தொண்டரையும் நான் பார்த்து கட்சியின் நிலையை மாற்றுவேன். நான் வெற்றி பெற்று காட்டுவேன்ப்பா” என்று குறிப்பிடுகிறார் சசிகலா.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 2 ஜூலை 2021