மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

ஒன்றிய அரசு: தடை விதிக்க மறுப்பு!

ஒன்றிய அரசு:  தடை விதிக்க மறுப்பு!

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கிறது. சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இனி ஒன்றிய அரசுதான் என்று அழைப்போம் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில், புதிதாகப் பொறுப்பேற்ற திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கிறது. அமைச்சர்களும் திமுகவினரும் அவ்வாறே அழைக்கின்றனர். இந்த செயல்பாடு தமிழகத்தில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதைத் தடுக்காவிட்டால் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது போல் அமையும். அதுபோன்று ஜம்மு-காஷ்மீர் போல் பிரிவினைக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒன்றிய அரசு என அழைப்பது தொடர்பாகச் சட்டமன்றத்தில் பாஜக தரப்பில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பது சமூக குற்றமில்லை. தொடர்ந்து அவ்வாறு தான் அழைப்போம் என முதல்வர் பதிலளித்தார். இதனால் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும்.

எனவே தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் உரைகளில் ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசுதான் என்று அழைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ் சிவஞானம் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று(ஜூலை 1) விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அவ்வாறு இருக்கும் போது இப்படித் தான் பேசவேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் மாநில அரசும் அமைச்சர்களும் இப்படித்தான் பேச வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்த மனு மூலம் மனுதாரர் தமிழக மக்களுக்கு எதை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் எனத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

- பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 1 ஜூலை 2021