மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

’மருத்துவர்களைப் பாதுகாப்போம்” : முதல்வர் ஸ்டாலின்

’மருத்துவர்களைப் பாதுகாப்போம்” : முதல்வர் ஸ்டாலின்

திமுக அரசு மருத்துவர்களைக் காப்பாற்றும் அரசு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக் கழகத்தில், “கொரோனா காலத்தில் மகத்தான பணிபுரிந்த மருத்துவர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பாராட்டு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட வார் ரூம் குறித்து விளக்கும் குறும்பட தகட்டை முதல்வர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று மருத்துவர்கள் தினம்.இந்த அரசு மக்கள் நலன் அரசு மட்டுமல்ல, மருத்துவர்கள் நலன் அரசாக, உங்களுக்கு என்றும் துணை நிற்கும். உங்களுடைய தியாகத்திற்கு,தொடர்ந்து ஆற்றக் கூடிய பணிகளுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “மக்கள் நலன் காக்கும் மகத்தான பணியில் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவர்கள் நாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா காலத்தில் வெள்ளை உடுப்பு அணிந்த ராணுவம் போல் அல்லும் பகலும் அரும் பணியாற்றுகின்றனர் மருத்துவர்கள். நாம் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளில் தளகர்த்தர்களாக-சிப்பாய்களாக-முன்கள வீரர்களாக பணியாற்றி, நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்த மருத்துவர்களுக்கு இந்த நன்னாளில் வாழ்த்தும், நன்றியும்!

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வலிமைபெற இந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உங்களின் ஒத்துழைப்பு எதிர்நோக்குகிறேன். இது மக்களின் அரசு; மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கான அரசாகவும் என்றும் இருக்கும். நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள்; இந்த அரசு உங்களைப் பாதுகாக்கும் முன்கள வீரராகச் செயலாற்றும். துணை நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக 1500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்க தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே “மருத்துவர்களைக் காப்பாற்றுங்கள்” என்ற கருப்பொருளை இந்த மருத்துவ தினத்தில் அறிவித்துள்ளது இந்திய மருத்துவ சங்கம்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 1 ஜூலை 2021