மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

பழங்குடியினருக்குத் தடுப்பூசி: நீலகிரி முதலிடம் - ஆட்சியருக்குப் பாராட்டு!

பழங்குடியினருக்குத் தடுப்பூசி: நீலகிரி முதலிடம் - ஆட்சியருக்குப் பாராட்டு!

நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகித தடுப்பூசி செலுத்தியதற்காக நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி மீதான அச்சத்தின் காரணமாக அதைப் போட்டுக் கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 100 சதவிகித பழங்குடியின மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நடவடிக்கை மேற்கொண்டார். நீலகிரியில் பணியர் காட்டு நாயக்கர், குறும்பர், தோடர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்தம் 427 பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.

இவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வீடு வீடாக சென்று, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதோடு பழங்குடியின மக்களுக்காகத் தேவையான தடுப்பூசியைப் அரசிடமிருந்து பெற்று சிறப்பு முகாம் நடத்தியும், 8 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் கிராமங்களுக்கு 7,8 கிலோ மீட்டர் நடந்து சென்றும் சுகாதாரத் துறையினர் தடுப்பூசி செலுத்தினர்.

அதுபோன்று நீலகிரியில் உள்ள தோட்டக்கலைத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 29ஆம் தேதி மாலையுடன், தகுதி வாய்ந்த ஏறத்தாழ 21,800 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது அதன்படி, இந்தியாவிலேயே பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார். இந்நிலையில் ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யாவின் முயற்சியைப் பாராட்டி அவரை சென்னை அழைத்துப் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

வியாழன் 1 ஜூலை 2021