மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு!

இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு!

தமிழ்நாட்டில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்ததிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கியும் உத்தரவிட்டு வருகிறது தமிழ்நாடு அரசு.

இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று (ஜூன் 30) வெளியிட்டுள்ள உத்தரவில், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ், முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வகிப்பார். மனுக்கள் பரிசீலனை, மின் ஆளுமை ஆகியவற்றைக் கூடுதல் பொறுப்பாக ஷில்பா பிரபாகர் சதீஷ் கவனிப்பார். குறைதீர்ப்பு பிரிவு மின் ஆளுமை பிரிவுகளின் சிறப்பு அதிகாரியாக மறு உத்தரவு வரும் வரை பொறுப்பில் இருப்பார்.

அதுபோன்று, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராகவும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அலுவல் சாரா துணைச் செயலாளருமான பி.வி.ஜெயசீலன், தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

வியாழன் 1 ஜூலை 2021