மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

ஆசிரியர்களை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

ஆசிரியர்களை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

ஆசிரியர்களின் முயற்சியால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் எல்கேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை மற்றும் இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 30) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி,கலந்துகொண்டு மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்து, இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “பெரியார் நகர் தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு 369 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 436 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, இந்தாண்டு புதிதாக 69 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர். ஆசிரியர்களின் முயற்சியால்தான் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதுபோன்று தாமாக முன்வந்து செயல்படும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்போம்.

ஈரோடு மாவட்டத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் கூறியிருந்தார். அதன்படி திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது, எவ்வளவு காலத்துக்குள் முடிப்பது குறித்து ஆலோசிக்க வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை 2) மாவட்ட

ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த காலங்களைவிட தற்போது கூடுதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது. எங்கேயோ, ஒன்றிரண்டு பேர் செய்வதை வைத்து திமுகவினர் முறைகேடு செய்கின்றனர் என்று சொல்ல முடியாது. திமுகவினர்தான் 100 வீடுகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா என்ற விவரங்கள் அடங்கிய பட்டியலைச் சேகரித்து மாநகராட்சியிடம் கொடுத்தனர்.

கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில் மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுப்பார். பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். வீட்டுவசதித்துறை சார்பில் நிறைய திட்டங்களை ஆலோசித்து வைத்துள்ளோம். வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதை அறிவிக்க உள்ளோம்” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

வியாழன் 1 ஜூலை 2021