மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

பாமக தோல்வி: மீட்டிங்கில் உருக்கமாகப் பேசிய ராமதாஸ்

பாமக தோல்வி: மீட்டிங்கில் உருக்கமாகப் பேசிய ராமதாஸ்

2021 சட்டமன்றத் தேர்தலில் பாமகவின் தோல்வி குறித்து அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் ஜூம் மீட்டிங் நடத்தியுள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சேலம் மேற்குத் தொகுதியில் இரா.அருள், பென்னாகரம் தொகுதியில் பாமக தலைவர் ஜி.கே. மணி, தருமபுரி தொகுதியில், வெங்கடேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 23 தொகுதிகளின் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய நகரச் செயலாளர்கள் ஆகிய நிர்வாகிகளுடன் ஜூம் மீட்டிங் நடத்தினார். இதில் தொகுதிவாரியாக 12 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில், “கூட்டணியில் பாஜக இல்லாமல் இருந்திருந்தால் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். சிறுபான்மையினர் வாக்குகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்குக்கூட நமக்குக் கிடைக்கவில்லை. அதேபோல் தலித் வாக்குகளும் பாமக வேட்பாளர்களுக்குக் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தனர்.

குறிப்பாக மாயவரம் தொகுதி பொறுப்பாளர்கள் பேசும்போது, “நீடூர் மற்றும் கங்கனாபுத்தூர் இஸ்லாமியர் பூத்களில் ஒரு ஓட்டுக்கூட பாமக வேட்பாளர்களுக்குப் பதிவாகவில்லை, அதிமுகவுக்குத் தலித் நிர்வாகிகள் வாக்குகள் மட்டுமே விழுந்தது. அதிலும் அவர்களின் குடும்பத்தினர் வாக்குகள் வரவில்லை” என்று தோல்விக்கான காரணங்களை அடுக்கினர்.

பின்னர் ராமதாஸ், ”10.5% இட ஒதுக்கீடுக்காகதான் குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டேன். வாங்கிக் கொடுத்த 23 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 5 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளோம், மாற்றுச் சமூகத்தின் வாக்குகளை வாங்க நீங்கள் முயலவில்லை. எனது ஒரே நோக்கம் 10.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக எந்த போராட்டமும் செய்யத் தயார், என்னைத் தியாகம் செய்யவும் தயார்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

வணங்காமுடி

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

புதன் 30 ஜுன் 2021