மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

கோயில் நிலங்களில் உள்ள குடும்பங்களுக்கு பட்டா கிடையாது!

கோயில் நிலங்களில் உள்ள குடும்பங்களுக்கு பட்டா கிடையாது!

கோயில் நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என இந்து அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு துறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், இந்து அற நிலையத் துறையில் தொடர்ந்து அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கோயில் சொத்துக்களை இணையதளத்தில் வெளியிடுதல், மக்களின் குறை தீர்க்கும் மையம், கோயில் நிலங்கள் மீட்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று(ஜூன் 30) ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ ஆதிமூல பெருமாள் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. இதன் சொத்துக்கள் மூலம் ஆண்டுக்கு 7.5 லட்சம் வருமானம் கிடைக்கிறது. ஆளுநர் உரையில் அறிவித்தபடி,100 கோடி ரூபாயை திருக்கோயில் பணிகளுக்கு முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோயில்களை புனரமைக்கவும், குடமுழுக்கு விழாவை நடத்தவும், தேர்களை சீரமைக்கவும்,தெப்பக்குளங்களை சீரமைக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும். அந்த வகையில் ஆதிமூல பெருமாள் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு பிறகு, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு இந்தாண்டுக்குள் நடைபெறும்.

அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடிக்கு மேலான 79 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நிலங்கள் மீட்கப்படும். அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில் குழுவாக 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகை தாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அவர்களுக்கு பட்டா வழங்கப்பட மாட்டாது.

கோயில் நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்கபடாது. கோயில் இடங்களில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளுக்கு மறு பரிசீலனை செய்து வாடகை நிர்ணயிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த காலங்களை போல இல்லாமல், இந்த துறை வெளிப்படைதன்மையுடன் இயங்கும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். அதுபோன்றுதான் செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் எந்தவிதமான செயல்பாடுகளும் நடக்கவில்லை என்பதற்கு இந்து அறநிலையத் துறை ஒரு சான்று.” என்று தெரிவித்தார்.

-வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 30 ஜுன் 2021