மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

அண்ணாவின் வழியில் திமுக ஆட்சி பீடு நடைபோடும்: முதல்வர்!

அண்ணாவின் வழியில் திமுக ஆட்சி பீடு நடைபோடும்: முதல்வர்!

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக நிறுவனர் அண்ணா பிறந்து வாழ்ந்த இல்லம் உள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அண்ணாவின் நினைவு இல்லத்துக்கு இன்று நேரில் சென்று பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வரின் வருகையையொட்டி அவர் செல்லும் வழி நெடுகிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. அண்ணா நினைவு இல்லத்திற்கு முதல்வர் சென்றதும் அவரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி இருவரும் புத்தகம் பரிசளித்து வரவேற்றனர்.

அண்ணா இல்லத்தைப் பார்வையிட்ட ஸ்டாலின் அங்கிருந்த அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் புகைப்படங்கள் மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதையடுத்து அங்கிருந்த குறிப்பேட்டில், தனது வருகையை குறித்து பதிவு செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களிடம் செல், மக்களுக்காக பணியாற்று, மக்களோடு மக்களாக வாழ் என்று தம்பிமார்களுக்கு அண்ணா ஆலோசனை வழங்கி கொண்டிருப்பவர். எனவே அதை நினைவுபடுத்தி குறிப்பேடு புத்தகத்தில் அதை எழுதி வைத்தேன். அண்ணா தந்த அறிவுரைப்படி இந்த ஆட்சி பீடு நடைபோடும் என்றும் நான் எழுதியுள்ளேன்.

காஞ்சிபுரத்துக்கு வருகை தந்து அண்ணாவின் இல்லத்தில் அவர் வாழ்ந்த இல்லத்தில் வாழ்த்துக்களை பெற வேண்டும் என்று நான் கருதினேன். அதற்கான வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எங்களை ஆளாக்கிய கலைஞரை உருவாக்கிய அண்ணாவின் இல்லத்துக்கு வந்து மரியாதை செலுத்தினேன். அண்ணாவின் பெயரில் நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெறும்” என்றார்.

அண்ணாவின் இல்லத்தை பார்வையிட்ட பின், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்துக்கு சென்று பார்வையிட்டார். 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார் தயாரித்த ஹூண்டாய் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

-பிரியா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

புதன் 30 ஜுன் 2021