மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

‘இப்பதான் அரசியல் பக்குவம் வந்திருக்கு’: ராஜேந்திர பாலாஜி

‘இப்பதான் அரசியல் பக்குவம் வந்திருக்கு’: ராஜேந்திர பாலாஜி

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி வரும் பொய், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவினார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “ எனக்கு கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமையில் உள்ளேன். அடுத்த சில நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம்.

கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுகிறேன். சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி வரும் பொய், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும், அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன். செயல்பட்டும் வருகிறேன்.

சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் கழகத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம். ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

புதன் 30 ஜுன் 2021