மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

ஜூலை 19ல் மழைக்கால கூட்டத்தொடர்!

ஜூலை 19ல் மழைக்கால கூட்டத்தொடர்!

வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை ஜூன் 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மழைக் கால கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு எம்பிக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களவை உறுப்பினர்களில் 540 பேரில் இதுவரை 403 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்களில் 232 பேரில் இதுவரை 179 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

கொரோனா காரணமாகக் கடந்த முறை மிக மிகக் குறைவான நாட்களே கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், இந்த முறை 20 நாட்களுக்கும் மேலாகக் கூட்டத்தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ,பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 200 நாட்களுக்கும் மேலான விவசாயிகளின் போராட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 30 ஜுன் 2021