மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

அரசு பேருந்து கட்டணம் உயருமா?: அமைச்சர் விளக்கம்!

அரசு பேருந்து கட்டணம் உயருமா?: அமைச்சர் விளக்கம்!

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஜூலை 5வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, நேற்று முதல் 27 மாவட்டங்களில் குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஜூன் 29) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்துடன், திருக்குறள் விளக்கவுரையும் எழுதும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பேருந்துகளிலும் வெவ்வேறு திருக்குறள் இருக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து துறை ரூ.31 ஆயிரம் கோடி அளவில் நஷ்டத்தில் உள்ளது. அதிமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் பேருந்துகளை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை. தமிழ்நாட்டில் இயக்கப்படும் பேருந்துகளில், 6 ஆயிரத்து 262 பேருந்துகள் சாதாரண பேருந்துகள். இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு புதிய வண்ணத்தில் பயணச்சீட்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இலவச பயணம் என்றாலும், எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதை கணக்கிட பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

சாதாரண அரசு பேருந்துகளை மக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய வண்ணம் அடிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின், 27 மாவட்டங்களில் நேற்று (ஜூன் 28) ஒரே நாளில்19,290 பேருந்துகள் மூலம், 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

500 எலக்ட்ரிக்கல் பேருந்துகள் மற்றும் 2000 டீசல் பேருந்துகள் வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 29 ஜுன் 2021