மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

சொகுசு வசதிகளுடன் சிறையில் இருந்தாரா மணிகண்டன்?

சொகுசு வசதிகளுடன் சிறையில் இருந்தாரா மணிகண்டன்?

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சொகுசு வசதிகளுடன் சிறையிலிருந்தார் என்று வெளியான செய்திக்கு அமைச்சர் ரகுபதி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி, 3 முறை கருக்கலைப்பு  செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை சாந்தினி அளித்த புகாரின்  பேரில் மாஜி அமைச்சர் மணிகண்டன் மீது 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மணிகண்டனைப் பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். சிறையில்  மணிகண்டன் செல்போன், ஏசி, சோபா உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் இருப்பதாகவும்,  போலீசார் சோதனையில் இது தெரியவந்ததாகவும்  இதன் அடிப்படையில் மணிகண்டன் புழல் சிறைக்கு இன்று அதிகாலை மாற்றப்பட்டார் என்றும் தகவல் வெளியானது.  

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏசி வசதியுடன் சைதாப்பேட்டை சிறையில் தங்கி இருப்பதாகக் கூறுவது தவறானது. அவர், சில நாட்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார். சிறையில் சட்டப்படி யாருக்கு, என்னென்ன சலுகைகள் இருக்கிறதோ, அதைத்தான் வழங்க முடியும். விதிகளுக்குப் புறம்பாக யாருக்கும், எந்த சலுகையும் வழங்கப்பட மாட்டாது” என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

“வழக்கமான நடைமுறை படிதான் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மாஜி அமைச்சருக்குச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை” என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மணிகண்டன் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

-பிரியா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 29 ஜுன் 2021