மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்

மத்திய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (ஜூன் 28) அறிவித்தார்.

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. சமையல் எண்ணெய் முதல் பெட்ரோல் டீசல் வரை அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால், மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

குறிப்பாகத் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டார்.

அதில், “பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்தும், கொரோனோ தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வைக் கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் 5ஆம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

திங்கள் 28 ஜுன் 2021