மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது?

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகுதான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று(ஜூன் 28) காலை நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,”கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது. அதுபோன்று, தமிழ்நாட்டிலும் ஜூலை 31ஆம் தேதிக்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டுவிடும். பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதை முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, மதிப்பெண் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

எனவே, தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்தான், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

தற்போதே சில தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக தகவல் வருகிறது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நுழைவுத்தேர்வு வழியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் அது செல்லாது; அவை ஏற்கப்படமாட்டாது. அவ்வாறு நடந்தால் அந்த கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டும் 2 நாட்களுக்கு முன்பு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதுதான் கல்லூரி சேர்க்கைக்கான முடிவு.

பொறியியல் கல்லூரிகளில் வழக்கமாக இருக்கும் அதே முறைதான் பின்பற்றப்படும், சிபிஎஸ்இ, மாநிலக் கல்வி மதிப்பெண்கள் அனைத்தும் ஒரே மதிப்பெண்தான். கல்லூரிகளில், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சலுகைகள் தொடரும்.

கூடுதல் மதிப்பெண் பெறத் தேர்வு எழுதுபவர்களுக்காக மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்படாது. வழக்கமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட் மாதத்தில் வகுப்புகள் தொடங்கப்படும். தற்போது கொரோனா காலம் என்பதால், கால தாமதம் ஆகிறது. உயிர்தான் முக்கியம், மற்றதெல்லாம் பிறகுதான் என்ற அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் அலை வருவதாகச் சொல்கிறார்கள். அது வராமல் இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நீட் தேர்விலிருந்து விலக்கு பெற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ, அத்தனை நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். ’புலிக்கு பிறந்தது பூனையாகுமா’ என்பதைபோல கலைஞர் வழியில் முதல்வர் அவர்களும் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்துள்ளார். அக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் . ஏற்கனவே நுழைவுத்தேர்வை ரத்து செய்த அனுபவம் உள்ளதால் நீட் தேர்வையும் ரத்து செய்வோம்.

சென்னை பல்கலையில் எம்.பில் படிப்பு ரத்து செய்யப்பட்டதற்கும், புதிய கல்வி கொள்கைக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை. 2009ஆம் ஆண்டு முதலே சில இடங்களில் இப்படிப்பு நிறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆசிரியர், மாணவர்களிடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன. இருப்பினும் இதுகுறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

திங்கள் 28 ஜுன் 2021