மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

சிறைக்கு செல்லும் வழியில் பரோல்: வீடு திரும்பிய பேரறிவாளன்

சிறைக்கு செல்லும் வழியில் பரோல்: வீடு திரும்பிய பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு இன்று (ஜூன் 28) உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று கடந்த மே 20ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இதனிடையே, கொரோனா பரவல் மற்றும் பேரறிவாளனுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று அவருக்குக் கடந்த மே 28ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டது. இதனால் அவர், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிலிருந்தபடியே, சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்குச் சிகிச்சை பெற்று வந்தார். இந்த பரோல் காலத்தில் திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையையும் செலுத்திக் கொண்டார்.

இதனிடையே, மேலும் ஒரு மாதம் பரோல் வேண்டுமென்று அற்புதம்மாள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருந்து வந்தது. எனினும் இன்றுடன் 30 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததால், போலீசார் பேரறிவாளனை பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சந்தைகோடியூர் பகுதியிலுள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பேரறிவாளனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனைக்குப் பிறகு புழல் சிறைக்கு பேரறிவாளனை அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். பேரறிவாளன் சென்ற வாகனம் வாணியம்பாடியைக் கடந்த நிலையில், அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது.

இந்த தகவல் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறைக்குப் புறப்பட்ட வாகனம் மீண்டும் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றது. பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்கப்பட்டதால் அவரது வீட்டுக்கு மேலும் 30 நாட்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 28 ஜுன் 2021