மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

தமிழகத்தின் புதிய டிஜிபி: டெல்லியில் ஆலோசனை!

தமிழகத்தின் புதிய டிஜிபி: டெல்லியில் ஆலோசனை!

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்பதைப் பற்றி இன்று (ஜூன் 28) காலை டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், தற்போதைய டிஜிபியான திரிபாதி ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு அனுப்பியுள்ள பட்டியலில் சைலேந்திரபாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், கந்தசாமி, ஷகில் அக்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இன்று காலை தொடங்கியுள்ள யு.பி.எஸ்.சி.யின் கூட்டத்தில் தமிழக அதிகாரிகளோடு ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடக்கும் இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழக அரசு கொடுத்த அதிகாரிகளின் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு மூவரை தேர்வு செய்து இன்றே தமிழக அரசிடம் ஒப்படைக்கும். அதிலிருந்து ஒருவர் தமிழ்நாடு டிஜிபியாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள சிலரைப் பற்றிய குறிப்புகள் இதோ....

சைலேந்திரபாபு:

1987 பணிநிலைப் பிரிவைச் சேர்ந்த சைலேந்திரபாபு டிஜிபிக்கான பட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே அதிகாரி ஆவார். கோவை மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்திருக்கும் இவர் இப்போது ரயில்வே டிஜிபியாக இருக்கிறார்.

கரன்சின்ஹா:

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1987 பணிநிலை அதிகாரியான கரன் சின்ஹா, சிறுசேரி சாஃப்ட் வேர் பொறியாளர் கொலை, எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகளை துப்பு துலக்கியவர்,

சுனில்குமார் சிங்:

பீகாரைச் சேர்ந்த இந்த அதிகாரி 1988 பணி நிலைக்குச் சொந்தக்காரர். புதுக்கோட்டை எஸ்பியாக பணியாற்றியவர். தேவர் ஜெயந்தி உள்ளிட்ட பல்வேறு சென்சிடிவ் களங்களைக் கையாண்டவர். தற்போது தமிழ்நாடு சிறைத்துறை தலைவராக இருக்கிறார். சிறைத் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர்.

ஷகில் அக்தர்:

1989 ஆம் ஆண்டு பணிநிலையைச் சேர்ந்த ஷகில் அக்தர் பாரசீகம், அரபி உள்ளிட்ட பல மொழிகளை அறிந்தவர். எல்.கே. அத்வானி துணை பிரதமராக இருந்தபோது மதுரை பயணத்தில் அவரை கொல்லத் திட்டமிட்ட இமாம் அலி உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை பெங்களூருவில் கைது செய்ததில் முக்கியப் பங்காற்றியவர். 2002 இல் நடந்த இந்த சம்பவத்தில் இருந்து பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியிருப்பவர். இந்தியாவின் வெளிவிவகார துறை புலனாய்வு அமைப்பான, ‘ரா’ அமைப்பில் பணியாற்றியவர் ஷகில் அக்தர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 28 ஜுன் 2021