மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

பொதுப்பணித் துறையில் நிர்வாக பிரிவு!

பொதுப்பணித் துறையில் நிர்வாக பிரிவு!

பொதுப்பணி துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றபோது, பொதுப்பணித் துறையின் கீழ் செயல்பட்டு வந்த நீர்வளத் துறைக்கு தனியாக துரைமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டார். பொதுப்பணித்துறைக்கு எ.வ.வேலு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பொதுப்பணி, நீர்வளத்துறையில் நிர்வாக வசதிக்காக, நிர்வாகத்தை பிரித்து தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பொதுப்பணித்துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கப்படுகிறது. இப்பிரிவு, முதன்மை தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். புதிய நியமனம், காலி பணியிட அறிக்கை தயார் செய்வது, சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்வது, பதவி உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய நிர்ணயம், ஒழுங்குமுறை நடவடிக்கை, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய அறிக்கை தயார் செய்வது போன்ற பணிகளை நிர்வாக பிரிவு மேற்கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 28 ஜுன் 2021