மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ரத்து: அன்புமணி வலியுறுத்தல்!

அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ரத்து: அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது. அரசு பணிகளுக்கான தேர்வு நடைமுறையின் மீதான வெளிப்படைத் தன்மையையும், நம்பக தன்மையையும் உறுதி செய்யும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று(ஜூன் 28) பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில், “ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும் குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்.

தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும் நேர்காணலை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 28 ஜுன் 2021