மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

தண்டோரா முறைக்கு தடை: எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்!

தண்டோரா முறைக்கு தடை:  எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில், தண்டோரா போடும் முறையை தடை செய்ய வேண்டும் என எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வீதி, வீதியாக தண்டோரா அடித்து மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியைப் பார்த்து பாடங்களைப் படிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்குப் பொதுமக்கள் மட்டுமில்லை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதுகுறித்து விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவீன காலத்தில் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், தண்டோரா போடும் முறையை ஆசிரியர் ஒருவரே பயன்படுத்துவதும், அதை அமைச்சர் ஊக்குவிப்பதும் வேதனையளிக்கிறது.

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது மே 25ஆம் தேதி 2006 அன்று, அன்றைய திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட்டின் மீது பேசுகிற நேரத்தில், “திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று முதல் நாளிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள்.

அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப்பகுதிகளில் தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கிறது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையில், நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த நேரத்தில், தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையில் வைத்திருப்பதை இந்த உலகுக்குச் சொல்கின்ற முறையாக இருக்கிறது. எனவே, தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்” என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குக் கோரிக்கை விடுத்தேன்.

அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இப்போதுள்ள அரசு அதை நிறைவேற்றுமா? இதை அரசியல் தலைவர்கள் வலியுறுத்துவார்களா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

-வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 28 ஜுன் 2021