மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

நீட் வர காரணமானவர் எடப்பாடி பழனிசாமி: மா.சுப்ரமணியன்

நீட் வர காரணமானவர் எடப்பாடி பழனிசாமி: மா.சுப்ரமணியன்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டில் திமுக கூட்டணி ஆட்சியின்போதுதான் நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என்று கேள்வி எழுப்பி இருந்த அவர், மாணவர்கள் மத்தியில் இருக்கும் குழப்பத்தைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 26) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், நீட் தேர்வு குறித்து மிக மிகத் தெளிவாகச் சட்டமன்றத்தில் தன்னுடைய பதிலுரையில் மிகச் சிறப்பாக முதல்வர் எடுத்துச் சொன்னார். நுழைவுத் தேர்வுகளிலிருந்து மாணவர்களைக் காப்பதற்கு டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் அறிக்கையைப் பெற்றதற்குப் பிறகு அதை வைத்து நீதிமன்றங்களுக்குச் சென்று அந்த தேவையே இல்லாமல் ஆக்கினார் கலைஞர்.

தொடர்ந்து 2010 இறுதியில் நீட் வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி நீதிமன்றங்களின் மூலம் உத்தரவைப் பெற்று நீட் தேர்வு திமுக ஆட்சியில் இருக்கிற வரை தமிழகத்தில் வராமலேயே தடுத்தவர் கலைஞர்.

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெயலலிதாவும் நீட் தேர்வு வேண்டாம் என்ற உறுதியிலிருந்தார். ஆனால், எப்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி வந்தாரோ, அவர் தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் விட்டுக்கொடுத்து நீட் தேர்வு வருவதற்கு காரணமாக இருந்துவிட்டு நீட் தேர்வுக்குக் காரணம் திமுகதான் என்று தவறான உதாரணத்தைக் கூறிவருகிறார்.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு தாக்கத்தைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் தமிழகத்துக்குச் சாதகமான முறையில் பரிசீலிக்கும் வகையில் இருக்கும்.

ஒருவேளை நீட் தேர்வு நடத்தப்படும் சூழல் வந்துவிட்டால் மாணவர்கள் தேர்வுக்கு முழுமையாகத் தயாராக வேண்டும். இதற்கான பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. தமிழகத்துக்கு நீட் வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு, இலக்கு. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

-பிரியா

.

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

ஞாயிறு 27 ஜுன் 2021