மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

இந்தியா ஒன்றியம்தான்: பதவியேற்ற பாஜக அமைச்சர்கள்!

இந்தியா ஒன்றியம்தான்:   பதவியேற்ற பாஜக அமைச்சர்கள்!

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று தமிழகத்தில் அழைக்கும் வழக்கத்தை எதிர்த்து பாஜகவினர் தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தனர். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போமென்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறினார். இன்னும் ஒருபடி மேலே போய் இது பிரிவினைவாதம் என்றெல்லாம் பாஜகவினர் இங்கே கடுமையான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பின்னணியில் இன்று (ஜூன் 27) புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின அமைச்சர்கள் ஒருவழியாக பதவியேற்றுக் கொண்டனர். மொத்தம் 5 அமைச்சர்களுக்கு புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா ஆகியோருக்கும் பாஜகவின் நமச்சிவாயம், சாய். சரவண குமார் ஆகியோருக்கும் அமைச்சர்களாக பதவியேற்பு செய்து வைத்தார் தமிழிசை.

முதலில் உறுதிமொழியை துணை நிலை ஆளுநர் தமிழிசை வாசிக்க, அதைத் தொடர்ந்து பாஜகவினரும் அதை அப்படியே வாசித்து பதவியேற்றுக் கொண்டனர். உதாரணத்துக்கு பாஜக அமைச்சர் அ. நமசிவாயம் பதவியேற்பு உறுதிமொழியில், “அ, நமசிவாயம் என்னும் நான் கடவுளின் பெயரால் உறுதி கூறுவதாவது... நான் சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பெயரில் உண்மையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன். இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில் என்னுடைய கடமைகளை உண்மையாகவும், மனச்சான்றுடனும் ஆற்றுவேன்” என்று தமிழிசை கூற அதை நமசிவாயம் மீண்டும் சொல்லி பதவியேற்றார்,.

இந்தியாவை ஒன்றியம் என்று சொல்லக் கூடாது என்று தமிழகத்தில் கண்டனக் குரல்களை தொடர்ந்து எழுப்பி வரும் பாஜகவினர் புதுச்சேரியில், ‘இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற வகையில்’ என்றுதான் சொல்லி பதவியேற்றுள்ளனர்.

ஆக இந்தியா என்பது ஒன்றியம்தான் என்பதையும், இந்திய அரசு ஒன்றிய அரசுதான் என்பதையும் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரும், பாஜக அமைச்சர்களும் இன்று பதவியேற்பு விழாவின் போது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தெளிவாகக் கூறியிருக்கிறார்கள்.

-வேந்தன்

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

ஞாயிறு 27 ஜுன் 2021