மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

மொழிகளைக் காக்க மக்கள் இயக்கம் தேவை: வெங்கையா நாயுடு

மொழிகளைக் காக்க மக்கள் இயக்கம் தேவை: வெங்கையா நாயுடு

நமது மொழி பாரம்பரியங்களின் பயன்களை எதிர்கால தலைமுறைக்கு வழங்க, மொழிகளை பாதுகாக்கும் மக்கள் இயக்கம் தேவை என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

ராஷ்ட்ரதாரா தெலுங்கு சமக்யா என்ற தெலுங்குமொழிக்கான கூட்டமைப்பின் ஆறாம் ஆண்டு மாநாடு இன்று (ஜூன் 27) காணொலியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய வெங்கையா நாயுடு,

“தலைமுறைகள் மற்றும் நாடுகளை கடந்து மக்களை இணைக்கும் சக்தி மொழிக்கு உள்ளது. நமது மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை பாதுகாக்கவும், வளப்படுத்தவும் மற்றும் பிரச்சாரம் செய்யவும், ஒருங்கிணைந்த முயற்சி தேவை. தெலுங்கு மொழி மற்றும் நமது உள்ளூர் பாரம்பரியங்களுக்கு புத்துயிர் அளிக்க தெலுங்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். ஒரு மொழியை தவிர்ப்பது, அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அடுத்த மொழிகளையும், கலாச்சாரங்களையும் சிறுமைப்படுத்தாமல், ஒருவரின் தாய் மொழியை பாதுகாப்பது மற்றும் முன்னேற்றுவது ஒவ்வொருவரின் கடமை”என்று பேசினார்.

மேலும் அவர், “தேசிய கல்வி கொள்கையில் கூறியபடி, ஆரம்பக் கல்வி ஒருவரின் தாய்மொழியில் இருக்க வேண்டும். உயர்ந்த அரசியல் சாசன பதவிகளில் தற்போது உள்ள குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரெல்லாம் ஆரம்பக் கல்வியை தாய்மொழியில் பயின்றனர். தாய்மொழியில் கற்றால், ஒருவரால் வாழ்வில் வெற்றி பெற முடியாது, முன்னேற முடியாது என்ற தவறான எண்ணம் மக்களுக்கு இருக்க கூடாது. இந்த எண்ணத்தை பொய்யாக்க எங்களிடம் பல உதாரணங்கள் உள்ளன.

தெலுங்கு இலக்கியத்தை இதர இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து அதன் மூலம் ஒருவரின் மொழி பாரம்பரியத்தை பரப்ப அதிக முயற்சிகள் தேவை. பெருந்தொற்றை முன்னிட்டு, பல கலாச்சார அமைப்புகள் தங்கள் பணியை ஆன்லைன் மூலம் தொடர்கின்றன. இதே உணர்வுடன், மொழி மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்”என்று கூறியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர்.

தெலுங்கு மொழியை பாதுகாக்கவும், பரப்பவும், தெலுங்கு மாநிலங்களை தாண்டி ஆயிரக்கணக்கான அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்பினர் ஒன்றிணைந்து ராஷ்ட்ரதாரா தெலுங்கு சமக்யா என்ற பொது தளத்தை ஏற்படுத்தி இந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 27 ஜுன் 2021