மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு!

தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் வரும் 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 2024 ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் இந்த முக்கியமான தேர்தலில் கூட்டணி நிலவரம் எப்படியிருக்கும் என்ற விவாதங்கள் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்”என்று அக்கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் உபி வரலாற்றிலேயே முதல் முறையாக பரம வைரிகளான பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் பாஜகவை எதிர்ப்பதற்காக கூட்டணி வைத்தனர். ஆனால் மொத்தமுள்ள 80 இடங்களில் இந்த கூட்டணி 15 இடங்களை மட்டுமே பிடித்தது. அதிலும் பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் 11 இடங்களில் வெற்றிபெற்றது. இந்நிலையில், தேர்தலுக்குப் பின் அந்தக் கூட்டணி முறிந்துவிட்டது.

வரும் 2022 சட்டமன்றத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் தனித்துப் போட்டியிடப் போவதாக மாயாவதி அறிவித்துள்ளார்,

மாயாவதியின் கட்சி ஓவைசி கட்சியுடன் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் சில நாட்களாக வந்த நிலையில் இன்று (ஜூன் 27) தனது ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ள மாயாவதி,

“உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனியாகவே போட்டியிடும். எதிர்வரும் பஞ்சாப் தேர்தலுக்காக ஷிரோமணி அகாலிதளத்துடன் மட்டுமே கட்சி கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் கூட்டணி இல்லை” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஏற்கனவே காங்கிரஸ் உத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி தனித்து நிற்பதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி தன் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கும் வேலைகளில் தீவிரமாகியுள்ளது.

ஆக பாஜக, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், சமாஜ் வாதி அணி என உத்திரப்பிரதேசத்தில் இப்போதைக்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 27 ஜுன் 2021