மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

டெல்டா பிளஸ் : மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு செயலாளர் உத்தரவு!

டெல்டா பிளஸ் : மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு செயலாளர் உத்தரவு!

டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் 12 மாநிலங்களில் 51 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா பாதிப்புள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என ஒன்றிய அரசு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில்,சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனோ வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்டா பிளஸ் வகை கொரோனோ பாதிப்புகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டு வருகிறது.

டெல்டா பிளஸ் வகை கொரோனோ குறித்த ஆய்வில் அதிவேகத்தில் நோய் பரவுதல், கடுமையான நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், மருத்துவமனைகள், மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக டெல்டா பிளஸ் வகை கொரோனோ பாதிப்புகளுக்கு எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக கண்டறிந்து, பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். உருமாற்றம் அடைந்த கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டால், உடனடியாக சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

ஞாயிறு 27 ஜுன் 2021