மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

கூடுதல் கட்டணம்: கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து!

கூடுதல் கட்டணம்: கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து!

கொரோனா சிகிச்சைக்கு 12 மருத்துவமனைகள் வசூலித்த கூடுதல் கட்டணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 20 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அவர்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் உடன் இருந்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது மாநிலத்தில் வைரஸ் தொற்று பரவல் அதிகமாக இருந்தது. பின்னர் அதனை வகைப்படுத்தி ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சரி செய்து மூன்றாம் அலை வந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்ற நிலையை உருவாக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி மதுரையில் நான்கு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் அமைக்கப்பட்டு இரண்டு இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளது. மதுரை மாநகரில் பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் பறக்கும் படைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஆய்வகத்தில் உள்ள டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றைக் கண்டறியும் பரிசோதனை கருவிகளைக் கண்டறிந்து அவற்றை வாங்கி தமிழகத்தில் சென்னை மதுரை கோவை உள்ளிட்ட இடங்களில் பரிசோதனை மையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலித்த 12 மருத்துவமனைகளிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த 12 மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

ஞாயிறு 27 ஜுன் 2021