மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

பெட்டியே தொலைந்துவிட்டதா?: சீமான் கேள்வி!

பெட்டியே தொலைந்துவிட்டதா?: சீமான் கேள்வி!

மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை பெட்டியே தொலைந்துவிட்டதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த தேர்தல் பரப்புரையின்போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் மக்களின் கோரிக்கை மனுக்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றார். அதன் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றதும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, அத்துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மனுக்களின் உண்மை தன்மை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது, இதுவரை 75 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில், “திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழ்நாட்டின் அத்தனை பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளாவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.

என்னவானது தமிழ்நாட்டின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே. மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை பெட்டியே தொலைந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 27 ஜுன் 2021