மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

தமிழகத்தின் அடுத்த  டிஜிபி யார்?

தமிழகத்தின் தற்போதைய டிஜிபியான ஜே.கே. திரிபாதியின் பதவிக் காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து தமிழ்நாடு போலீஸின் வெள்ளை மாளிகையில் வீற்றிருக்கப் போவது யார் என்ற கேள்வி போலீஸ் வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பான விவாதமாகியிருக்கிறது.

2019 ஆம் ஆண்டு டி.கே. ராஜேந்திரனின் பதவிக்காலம் முடிந்ததும் டிஜிபியாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்றார். வழக்கமாக ஒரு டிஜிபியின் பதவிக் காலம் முடியும் முன்பே, அடுத்த டிஜிபிக்கான தகுதியுள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து மாநில அரசு ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கும். ஒன்றிய உள்துறையின் ஆலோசனையோடு அப்பட்டியலில் இருந்து மூன்று அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்படும். . அதன் பின் மாநில அரசு அந்த மூவரில் ஒருவரை தேர்வு செய்து, மாநில அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கும். பெரும்பாலும் ஒன்றிய அரசு, டிஜிபி விஷயத்தில் மாநில அரசின் பரிந்துரையை ஏற்கும். இந்த நிர்வாக நடைமுறைகளின்படி ஜூன் 28ஆம் தேதி அனேகமாக தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற அறிவிப்பு வரலாம்.

தமிழ்நாடு காவல்துறை மற்றும் கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, “சீனியாரிட்டி அடிப்படையில் அடுத்த டிஜிபி ரேஸில் கரன் சின்ஹா, சைலேந்திரபாபு,நிர்மல் குமார் ஜோஷி, ஜெயந்த் முரளி, ஷகில் அக்தர் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் மிகப் பெரும்பாலும் திமுகவுக்கே விழுந்திருக்கிறது. இந்த அடிப்படையில் தமிழகத்தின் மிக முக்கியமான பதவியான டிஜிபி பதவியை சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு அளிக்கலாம் என்ற ஆலோசனை முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சில வாரங்களாகவே நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் ஷகில் அக்தருக்கு டிஜிபி வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவருக்கு அடுத்து, நிர்மல் குமார் ஜோஷி, ஜெயந்த் முரளி ஆகியோர் டிஜிபி பதவியை குறிவைத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பிரகாஷ் சிங் வழக்கில் டிஜிபியாக பதவியேற்பவர்கள் குறைந்தபட்சம் ஆறுமாத பணிக்காலம் மீதம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது. இதுவும் டிஜிபி நியமனத்தில் கருத்தில் கொள்ளப்பட இருக்கிறது” என்கிறார்கள்.

-வணங்காமுடி

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

ஞாயிறு 27 ஜுன் 2021