மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

பிளஸ் 2 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மதிப்பெண் கணக்கிடும் முறையை நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) - 50%, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை (Written) மதிப்பெண் மட்டும்) - 20%, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு (Practical) / அக மதிப்பீடு (Internal) - 30% ஆகிய முறையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி ஜூலை 31ஆம் தேதிக்குள் மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அட்மிஷன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்கள் என 600 பேருக்கு கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை வழங்கிய பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியிடுவது தொடர்பாக வழிகாட்டல் நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்களின் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிது. மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பது குறித்துப் பேசிய அவர், “மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள், பெற்றோர்களின் கருத்துகளைப் பெற்று, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பின்னர் முடிவெடுக்கப்படும்” என்றார்.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

ஞாயிறு 27 ஜுன் 2021