மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

'தமிழ் மொழியின் அபிமானி நான்’: பிரதமர் மோடி

'தமிழ் மொழியின் அபிமானி நான்’: பிரதமர் மோடி

உலகின் மிக பழமையான தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாடுவது வழக்கம்.

அதுபோன்று, இன்று(ஜூன் 27) காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, “சில இடங்களில் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இது ஆபத்தானது. நான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டேன். 100 வயதான என் தாயாரும் இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டார். தடுப்பூசி தொடர்பான எதிர்மறையான வதந்திகளை தயவுசெய்து நம்ப வேண்டாம். நமது விஞ்ஞானிகளை நம்புங்கள். இதுவரை பலரும் தடுப்பூசி எடுத்துள்ளனர். அவர்களுக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. தடுப்பூசியை முடிந்த அளவு விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் இருக்கிறது. அதனால், தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மனதில் உறுதி, நேர்மை எல்லாம் ஒன்றாக சேரும் போதுதான் ஒரு சாம்பியன் உருவாகிறார்.

மிகச் சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. மில்கா சிங்கின் ஒட்டுமொத்த குடும்பமே விளையாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார்கள். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்படி நான் அவரிடம் கோரிக்கைவிடுத்தேன்.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஜாதவ் ஒரு சிறந்த வில்வித்தை வீரர். இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை நேஹா கோயல். வில்வித்தை வீராங்கனை தீபிகா, சென்னையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நடை பந்தய வீராங்கனை பிரியங்கா. பனாரஸை சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் ஷிவ்பால் சிங் இப்படி கணக்கே இல்லாத பெயர்களில் ஒரு சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இவர்கள் அனைவருமே கடுமையான போராட்டத்துக்கு பின்புதான் இந்த நிலைக்கு வந்துள்ளார்கள்.

இவர்கள் தங்களுக்காக மட்டுமில்லை, தேசத்திற்காகவும் விளையாட செல்கிறார்கள். நாம் திறந்த மனதோடு அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்க வேண்டும். வீரர்களை சமூக வலைத்தளங்களில் #Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம்.

உலகத்திலேயே பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான். மிகவும் தொன்மையான மொழி இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை. தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது; தமிழ் மொழி குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது. பருவமழை காலம் தொடங்க உள்ளது. இதனால், தண்ணீரை சேகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 27 ஜுன் 2021