மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

போலீசாரை மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது!

போலீசாரை மிரட்டிய இந்து முன்னணி பிரமுகர் கைது!

சேலத்தில், போலீசாரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் உள்பட இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்த போலீசார், முகக்கவசம் அணியாமல் வந்ததற்கு, ரூ.200 அபராதம் விதித்து, வண்டி சாவியை வாங்கி வைத்துள்ளனர்.

அபராதம் செலுத்தியவர்கள், இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகியான செல்லபாண்டியனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செல்லபாண்டியன், என்ன நடந்தது என்று கேட்காமல் போலீசாரை, கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

"ஃபைன் போட்ட அந்த 200 ரூபாயை திருப்பி தரணும்.. இப்பவே அந்த 200 ரூபாய் எனக்கு வந்தாகணும்.. வண்டி சாவி எங்கே? சங்கை அறுத்துடுவேன்.. டியூட்டி போட்டால், பேசாம உட்கார்ந்துட்டு போய்ட்டே இருக்கணும்..என்ன அராஜகம் பண்றீங்களா….இந்து முன்னணிக்கு மரியாதை கொடுக்கணும்..பெட்ரோல் ஊத்தி கொள்ளுத்திடுவேன்” என்று பேசியுள்ளார்.

இதுகுறித்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த, அனைவரும் இந்து முன்னணி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இந்து முன்னணி பேரியகத்தின் சூரமங்கலம் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்த செல்லபாண்டியன் என்பவர் இயக்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகவும், இயக்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராகவும் நடந்து கொண்ட காரணத்தால், இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஸ்குமார் தெரிவித்துள்ளார்.

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில், செல்லப்பாண்டியன் மற்றும் தமிழரசன் ஆகியோர் மீது ஆபாச பேச்சு, பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் மற்றும் மத ரீதியாக விமர்சனம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து திருப்பூர், அவிநாசியில் பதுங்கியிருந்த செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசு ஆகிய இருவரையும் இன்று போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 27 ஜுன் 2021